கோவையில் 'ஒம் முருகா' என்று பாடிக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதியவர்..!

கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், 'ஓம் முருகா' என்று கடவுள் பாடல்களை பாடிக் கொண்டு, நடனமாடியபடி கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.



கோவை: கோவை செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர், நடனமாடிக் கொண்டும், 'ஓம் முருகா', என்று பாடிக் கொண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தது, பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

நாளையுடன் (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் முடிவடையும் நிலையில், இன்று பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். 

இதில் குறிப்பாக சுயேச்சை வேட்பாளர்கள் அவரவர் பாணியில் நூதன முறையில் வேடபு மனு செய்யும்செய்து வருகின்றனர்.



இன்று காலை தேர்தல் மன்னன் என்று அனைவராலும் அழைக்கப்படும், நூர் முகமது என்பவர் கையில் திருவோடு ஏந்தியபடி மிளகாய் மாலை அணிந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவரையடுத்து, கோவை செல்வபுரத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான துரைசாமி என்பவர் முருகர் பாடல்களை பாடிக்கொண்டு நடனம் ஆடியபடி வந்து, கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடியிடம், கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய அவர், சிறு வயது முதலே நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்து வருவதால் எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன், என்றார். 

மேலும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...