கோவையில் வரும் ஏப்ரல் 2ம் தேதியன்று போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதியன்று மாநகராட்சியின் சார்பில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி பகுதிகளில் தேசிய போலியோ நோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் வருகின்ற 2.04.2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாநகராட்சியின் சார்பாக போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்காக அனைத்து மாநகராட்சி நகர் நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக் கூடங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் அன்று பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ நோய்த்தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் வகையில் மாநகராட்சி பிரதான அலுவலகம், ரயில் நிலையம், 5 பேருந்து நிலையங்கள் மற்றும் 5 நடமாடும் ஊர்திகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், மாநகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் வழங்கப்படவுள்ள போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முற்றிலும் பாதுகாப்பானது ஆகும்.

எனவே, கோவை மாநகரில் வசிக்கும் அனைத்து பொது மக்களும் தங்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் எந்தவிதமாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல் கண்டிப்பாக அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி நமது மாநகராட்சிப் பகுதியிலிருந்து போலியோ நோயினை அறவே ஒழித்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி  அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...