தொடர் உயிரிழப்புகள் எதிரொலி: கோவை வெள்ளிங்கிரி மலையை யாரெல்லாம் ஏறக்கூடாது - வனத்துறை அறிவுரை.

இருதய நோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தோர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள்  மலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக,மழையேற்றத்தின் போது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் எவை? யாரெல்லாம் மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என்றுஇருட்டுப்பள்ளம் போலாம்பட்டி வனச்சரக அலுவலகம் இன்று 

செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. 

கோவை வனக்கோட்டம், பூண்டியில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி மலையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 5 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



அதன்படி, இருதய நோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தோர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள்மலையேற்றத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின்னரே, வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல வேண்டும் என்றும் அவ்வாறு மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். தனியாக செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



"மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும்போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அவ்வாறு, உயிரிழப்புகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களை மலை அடிவாரத்திற்கு கொண்டு வருவது வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. 

எனவே, அனைவரின் நலன் கருதி மேற்கொண்ட அறிவுறைகளை பொதுமக்கள் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்" என்று வனத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...