காங்கேயத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் செயல்படுகிறது - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது பாஜக நிர்வாகி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார்..!

மாநிலம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள போதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து டாஸ்மாக் பார்கள் இயங்கி வருவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக பாஜக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதிகளில் அதிகாலை முதலே 24 மணிநேரமும் தங்கு தடையின்றி மது விற்பனை, அனைத்து டாஸ்மாக் பார்களிலும் நடைபெற்று வருவதாக, பாஜக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதித்த நேரத்தை பொருட்படுத்தாமல், 24 மணிநேரமும் விற்பனை நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டிய பாஜக மாவட்ட துணைத்தலைவர், கோபாலகிருஷ்ணன், காங்கேயம் பழையக்கோட்டை சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சென்று லைவ் வீடியோ எடுத்து பதிவேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



காங்கயத்தில் டாஸ்மாக் கடைகளில் நடைபெற்று வரும்  அத்துமீறல்கள் குறித்து ஆன்லைனில் இந்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தேர்தல் ஆணையத்தின் மீதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

புகாரில், காங்கேயம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்படாத நேரத்திலும் டாஸ்மாக் பாரில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் 24 மணிநேரமும் கிடைப்பதாக தெரிவித்த அவர், தற்போது தேர்தல் தேதி அறிவித்த பின்னர், தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள போதும், தடை செய்யப்பட்ட நேரத்தில் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு மிகவும் எளிதாக கிடைக்கின்றது என்று குற்றம் சாட்டினார். 



கால்நடை விற்பனையில் ஈடுபடும் விவசாயிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து சென்றால் பிடிக்கும் தேர்தல் பறக்கும் படையினர், தடைசெய்யப்பட்ட நேரத்தில் மதுவிற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்கமுடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் தெளிவாக சிந்தனையுடன் வாக்குச் செலுத்த கூடாது என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, உடனடியாக தேர்தல் முடியும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...