2 கிராம் தங்கத்தில் தேர்தல் விழிப்புணர்வு  - கோவை நகை வடிவமைப்பாளர் UMT ராஜா அசத்தல்..!

ஜனநாயகத்தின் திறவுகோல் நமது வாக்கு என்பதை குறிக்கும் விதமாக, 2 கிராம் எடையுள்ள தங்க பூட்டு - சாவியை வடிவமைத்துள்ளதாக ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா 100% வாக்குப்பதிவை குறிக்கும் வகையில் இரண்டு கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்துடன் கூடிய ஒரு பூட்டையும், 100% வாக்கு என்ற சாவியை உருவாக்கி உள்ளார். 



மேலும், அந்த சாவியில் தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதியை குறிக்கும் விதமாக 19 என்ற எண்ணையும், தேர்தல் முத்திரையையும், தேர்தல் மை வைக்கப்படும் விரலையும் வடிவமைத்துள்ளார்.

ஜனநாயகத்தின் திறவுகோல் நமது வாக்கு என்பதை குறிக்கும் விதமாக, 2 கிராம் எடையுள்ள பூட்டு - சாவியை வடிவமைத்துள்ளதாக ராஜா தெரிவித்துள்ளார். 

மேலும், இதை வடிவமைக்க இரண்டு நாட்கள் செலவிட்டதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...