வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் - கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக நாம் தமிழர் கட்சியினர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 



இந்நிலையில், நேற்று (மார்ச்.26) நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் இரண்டு பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

அப்போது, ஒரு வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உள்ள நிலையில், மூன்று பேர் மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்ததாகவும், வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் வருவதற்கு முன்னதாகவே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய ஆவணங்களுடன் வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக ஆவேசமடைந்தனர். 

எங்களை தடுத்ததை போல உங்களால் பாஜகவினரிடம் கூற முடியுமா..? என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...