முதலில் பூத்களில் ஆட்களை போட்டுவிட்டு அண்ணாமலை தேர்தலில் நிற்கட்டும் -  செயல்வீரர்கள் கூட்டத்தில் எஸ் பி வேலுமணி விமர்சனம்.

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ  பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் கலந்து கொண்டு கட்சியினர் மத்தியில் உரையாற்றினர்.

கூட்டத்திற்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கினார்.



பின்னர் கூட்டத்தில் பேசிய எஸ்.பி வேலுமணி, அதிமுக-வில் இருந்த போது, அம்மா கொடுத்த அனைத்து பதவிகளிலும் இருந்து விட்டு, பின்னர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு திமுகாவிற்கு சென்ற ராஜ்குமார் தான் திமுகவின் கோவை பாராளுமன்ற வேட்பாளராக நிற்கிறார். அப்படி என்றால், கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக-வில் கஷ்டப்பட்ட கட்சி நிர்வாகிகள் யாருமே இல்லை என்று தான் அர்த்தம்.



அதேபோல, பி.ஜே.பி கட்சியில் நிற்கும் அண்ணாமலை அனைத்து பூத்களிலும் பூத் ஆட்கள் போட்டுவிட்டு தேர்தலுக்கு நிற்கட்டும். ஏனென்றால், அந்த கட்சியில் பூத் ஆட்கள் போடவே யாரும் இல்லை என்று தான் அர்த்தம். அதனால், கோவை தொகுதியில் சிங்கை ராமசந்திரன் தான் வெற்றி பெறுவார், என்று கூறினார். 

தொடர்ந்து, பேசிய வேட்பாளர் சிங்கை ராமசந்திரன், கோவை தொகுதியில் வேட்பாளர் நான் கிடையாது. நீங்கள் அனைவரும் தான் வேட்பாளர்கள். நீங்கள் தான் அனைத்து பகுதிக்கு சென்று வாக்குகளை சேகரித்து என்னை வெற்றிபெற செய்யப் போகிறீர்கள் என்று கூறினார். இந்த கூட்டத்தில், அதிமுக கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.



நிகழ்ச்சியில், அ.ம.மு.க கட்சியின் முன்னாள் கோவை மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...