கோவை அதிமுக வேட்பாளருக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏக்கள்..!

நஞ்சுண்டாபுரம் பகுதியில், எம் எல் ஏக்கள் -அம்மன் கே.அர்ஜுனன் மற்றும்  கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: நேற்று, மார்ச் 27, வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், கோவை தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும், அவரவர் வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில், அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கிஇன்று (மார்ச்.28) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக, அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

பகுதிக் கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகர், உலகநாதன் மற்றும் அதிமுக வார்டு செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...