தமிழகம் புதுச்சேரியை தொடர்ந்து கேரளா, ஆந்திரா கர்நாடகாவில் மனிதநேய ஜனநாயக கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு - திருப்பூரில் தமிமுன் அன்சாரி பேட்டி

ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார்.


தமிழகம் புதுச்சேரியை தொடர்ந்து கேரளா , ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மனிதநேய ஜனநாயக கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின்தலைவர் தமிமுன் அன்சாரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து கடந்த 19ஆம் தேதி முதல் களப்பணி ஆற்றி வருகிறது. இந்த நிலையில், தமிழகம் புதுச்சேரியை தொடர்ந்து கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

மேலும், புலம்பெயர்ந்து அங்கு சென்று வாழ்ந்து வரும் தமிழக மக்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இருப்பதன் காரணமாக அவர்கள் மூலமாக இந்திய கூட்டணிக்கு ஆதரவளித்திருப்பதாகவும், அங்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மனித. நேய ஜனநாயக கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், அதற்கு உதாரணமாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மட்டும் அவர்கள் கேட்ட சின்னங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு சின்னங்கள் தராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட சின்னம் இப்போது இல்லை என மறுப்பதும் உதாரணமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, பாஜக தனக்கு சாதகமான உள்ள மாநிலங்களுக்கு ஒரு தேர்தல் தேதியையும், சாதகம் இல்லாத மாநிலங்களுக்கு இன்னொரு தேதி என அறிவித்திருப்பதாக குற்றம் சாட்டினார். 

கட்சியில் தகுதியான ஆட்கள் இல்லாதது போல ஆளுநரை ராஜினாமா செய்ய வைத்து தேர்தலில் போட்டியிட வைப்பது என்பது ஆரோக்கியமற்ற செயல் எனவும் அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் போது செலவழிக்கப்படும் மக்கள் வரிப்பணம் வீணாகப்படுவதாக

சுட்டிக் காட்டினார். 

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட, திமுக தலைமையிலான கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தை வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட செயலாளர் ராயல் ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...