திருப்பூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டிய உப்பாறு அணை பாசன விவசாயிகள்..!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி, தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணை பாசன விவசாயிகள் வீடுகள் மற்றும் மாட்டு தொழுவங்களில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அணையில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகளிடம், மாவட்ட நிர்வாகம்பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களை புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 15-ஆம் தேதி,உப்பாறு பாசன விவசாயிகளை அழைத்து பேசுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால், அன்றைய தினமும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, உப்பாறு பாசன விவசாயிகள், பல்வேறு கட்ட போராட்டங்களில் வாயிலாக எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று வீடுகள் மற்றும் மாட்டு தொழுவங்களின் முன்பு கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



உப்பாறு அணையை சுற்றியுள்ள பணமரத்துபாளையம்,தாசம்பட்டி, பநடுப்பாளையம், கொளிஞ்சிக்காட்டுபுதூர், பொன்னாளிபாளையம், கோப்பனம்பாளையம், சகுனிபாளையம், மடத்துப்பாளையம், தொப்பம்பட்டி, ராங்கம்பாளையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கருப்பு கொடியை கட்டி கிராம மக்கள் அவர்களது கண்டனத்தை பதிவு செய்தனர். 



7-வது முறையாக, விவசாயிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்து,விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...