வெள்ளக்கோவிலில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

வாக்குறுதிகளில் ஒன்றான கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்பது முதல் வாக்குறுதியாக நிறைவேற்றப்படும் என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசை ஆதரித்து திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.



வெள்ளகோவில் கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேசியதாவது, இந்திய கட்சி கூட்டணியின் நிர்வாகிகளே, திமுக கட்சி நிர்வாகிகளே, செயல் வீரர்களே மற்றும் நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகளே அனைவருக்கும் எனது மாலை வணக்கம். கூடியிருக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது மிகவும் மன நிறைவாக உள்ளது. எனவே மன திருப்தியுடன் நான் இங்கு இருந்தே கிளம்பி செல்ல இருக்கின்றேன் என பேச்சை துவங்கினார்.

இந்த கூட்டமே நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும் இதுவரை மாநில பொறுப்பில் இருக்கும் பிரகாஷ் அடுத்த கட்டமாக வரவிருக்கும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எம்.பி. வேட்பாளராக நமது கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு களம் இறங்கி இருக்கிறார். இவருக்கு தொடர்ந்து உங்களின் ஆதரவும் வாக்குகளையும் தந்து அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியுமான ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் ஒன்று காங்கேயம் தொகுதியில் தேர்தல் வாக்குறுதியாக இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய மருத்துவ பயன்பாட்டிற்கு புதிய மருந்தகம் அதாவது கேன்சர் சம்பந்தப்பட்ட நோய்க்கு புதியதொரு மருத்துவமனை கட்டப்பட்டு அதை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதிக்கு உண்டான வாக்குறுதியில் ஒன்று என்றார்.



திமுக ஆட்சியில் மட்டும்தான் அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துழைப்புடன் ஆதரவுடன் மனிதநேயத்துடன் பழகுகின்றனர். இதுவே மத்திய அரசு ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி ஆளும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியாகவும் மனிதாபிமானம் வேறுபட்டுடன் இருக்கின்றனர். அதேபோல் வட மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி அழிக்கப்பட்டுள்ளது என்பதை நம் கண் கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் அறிந்தது. பிரதமர் ஒரு முறை கூட சென்று அந்த ஏழை எளிய மக்களையும் பாதிக்கப்பட்ட பெண்களும் பார்வையிட ஆதரவு தெரிவிக்க விசாரிக்க வரவில்லை.

அதே போல் முக்கியமாக விவசாயிகளுக்கு எதிரான கட்சியாக இதுவரை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகள் உயிரிழக்கும் வரையிலும் அரசு கீழ இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பிஜேபி அரசு மற்றும் மோடி. இதற்கு எதிரான மாநிலம் தமிழ்நாடு இருந்து வருகின்றது. அதிமுக கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வாக்கு போடுவதை தவிர்த்து வருகின்றனர் என்றும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் கட்சி திமுக கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும்.

எனவே இந்த தேர்தல் என்பது விடுதலை போராட்டம் என்பது போல நமது கழக தொண்டர்களின் நிர்வாகிகளும் உறுதுணையாக செயல்பட்டு வெற்றியடைய செய்ய வேண்டும். ஏழ்மையாக உள்ள குடும்பம் விவசாயிகளின் கடன் தொல்லை காரணமாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கு அடிப்படையாக அமைந்தது அதிமுக அரசும் மத்திய அரசாக பிஜேபி அரசும் செயல்பட்டு கொண்டு வருகிறது. இவர்களை முற்றிலுமாக எதிர்த்து வருமே நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் அதேபோல் கல்வி கடன், நகை கடன், பயிர் கடன் போன்றவற்றில் எந்த ஒரு சலுகையும் இன்றி ஏழை எளிய மக்களை புறக்கணிக்கின்றனர். 68,670 கோடி கார்ப்பரேட்டுக்கு கடனாக வழங்கி உள்ளது. இவர்களின் ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சி என்பதை விட வேறு என்ன என்று கூறுவது. ஏழை எளிய மக்களுக்கு செய்யாத இந்த அரசு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைக்கூலியாக செயல்பட்டு கொண்டு வருகிறது.

வாயைத் திறந்தால் உண்மையே வராது. 15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று ஏழை எளிய மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்ற அரசுதான் மோடி அரசு. எந்த வாக்குறுதிகளையும் செய்யவில்லை என்பது முக்கியத்துவம் இதனைத் தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகளும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் செல்லாது என மோடி அரசு அறிவித்தது மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மீண்டும் 2000 நோட்டு செல்லாது என்று மீண்டும் பொருளாதாரத்தை கீழே இறக்கியது மோடி அரசு.

நாம் மத்திய அமைச்சகத்தில் ஆட்சிக்கு வரும் பொழுது ஆட்சித் தலைவர் கழக தளபதி ஸ்டாலின் கூறியது போல் வாக்குறுதிகளில் ஒன்றான கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்பது முதல் வாக்குறுதியாக நிறைவேற்றப்படும்.  அதனைத் தொடர்ந்து பெட்ரோல் விலை குறைக்கவும் டீசல் விலை குறைக்கப்படும் ரூ.75க்கு பெட்ரோல் வழங்கப்படும் என்பது வாக்குறுதி தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தது பிறகு டோல்கேட் பிரச்சனைகள் நிறைவேற்றப்படும். அதை தொடர்ந்து விவசாயிகளுக்கு சலுகையாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள தென்னை விவசாயிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்கும் வகையில் அடிப்படை ஆதாரங்களை வழங்கப்படும் என்பதை வாக்குறுதிகள் ஒன்றாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

மக்களுக்கான திட்டங்களை மக்களுக்கு மிகவும் பெரிதளவில் உதவக்கூடிய வாக்கு உறுதிகளை தளபதி ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். கண்டிப்பாக ஆட்சிக்கு வந்த பிறகு மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு நிறைவேற்றப்படும் என்பது சத்தியம். 25 பைசாவை வைத்து மட்டுமே தமிழகத்தை முன்னிலை மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறார் நமது ஸ்டாலின். மேலும் கலைஞரின் உரிமை தொகையை வழங்கப்பட்டு வருவது ஏழை எளிய மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது அனைத்து குடும்ப ஏழை எளிய பெண்களுக்கும் மிகப்பெரிய அளவில் உறுதுணையாகவும் தன்னம்பிக்கையோடு ஆகவும் இருந்து வருகிறது. வாக்குறுதிகள் ஒன்றாக சொல்லப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும் மகளிர் உரிமைக்காக வழங்கப்படும் என்பதை இன்றுவரை சுமார் ஒரு கோடி 15 லட்சம் ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால், வராது மீண்டும் ஏழை எளிய குடும்பங்களில் தமிழ்நாட்டில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதும் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதும் கண்டிப்பாக நடைபெறும்.

மேலும் தமிழ்நாட்டிற்கு முழு மரியாதை கிடைக்க வேண்டிய என்றால் கண்டிப்பாக திமுக மத்திய கூட்டணியில் ஆட்சி அமைத்தால் மட்டுமே நடைபெறும் என்பது உறுதி ஊழலுக்கு தனி சட்டம் வகுத்து திருடக்கூடிய ஒரே ஆட்சி பிஜேபி ஆட்சிதான். இந்த விஷயம் மிகப்பெரிய ஊழல் ஆட்சி எதுவும் இருக்க முடியாது. தேர்தல் பத்திரங்களின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது மோடி அரசில் தான். தேர்தல் பத்திரம் என்று நாட்டில் உள்ள அனைவரையும் விரட்டி மிகப்பெரிய அளவில் ஊழல் செய்தது மோடி அரசுதான்.

ஆனால் தமிழகத்தை மட்டும் இன்றும் எதுவும் செய்யவில்லை என்பது பெரியாரின் மண் என்பதுதான். பெரியாரே பெரிய அளவில் பின்பற்றக்கூடிய மண்ணாக தமிழ்நாடு இளைஞர் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நெற்றி நிறைய விபூதி பூசிக் கொண்டும் கோவிலுக்கு சென்றாலும் கூட பெரியாரின் சொல்லை பெரிய அளவில் போற்றக்கூடிய மண்ணாக தமிழ்நாடு திகழ்கின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் அனைத்து இடங்களிலும் இந்திய கூட்டணிக்கு வாக்குகளை அளித்து இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி அடையச் செய்யும் என்பதில் நமது கடமை என்பதும் மறவாதீர்கள். தமிழ்நாட்டிலேயே நமது பெரியாரின் மண்ணிலே கண்டிப்பாக திமுக ஆட்சியை தான் ஆட்சி அமைக்கும். இதற்கு வேட்பாளர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான பிரகாஷ் அவர்களை வெற்றியடைய செய்ய வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...