கோவையில் உள்ள முன்னணி இன்குபேட்டர் ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸானது உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்பேட்டை முன்னேற்றக் கழகத்தின் கீழ் செயல்படுகின்ற டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இதன் வாயிலாக ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரி உயிரிசார் தொழில் நுட்பத்தை சார் தொழில் முனைவோர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வணிக வெற்றியை நோக்கி அவற்றைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐசி ரைஸின் சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் ஏஐசி ரைஸின் சார்பில் இன்குபேஷன் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரதீப் ராஜ் மற்றும் முதலீடுகள் மற்றும் வணிக மேலாண்மையின் துணைத் தலைவர் அருண்ராஜ் மாணிக்கராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும், டைசில் உயிரி பூங்கா சார்பில் மேலாண்மை இயக்குநர் பூங்குமரன், நிர்வாக செயலர் காயத்ரி மற்றும் தலைமை மின் பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...