உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் - முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு

பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளருமான சண்முகவேலு தலைமயில் நடைபெற்றது.



கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து வீடு வீடாக மத்திய அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்ப எதிர்பார்க்கின்றனர், மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமர் ஆவது உறுதி என முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளருமான சண்முகவேலு பேசினார்.



பின்னர் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பேசும்போது, தமிழகத்தில் திராவிட கட்சிகளை வெளியேற்ற தற்பொழுது நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. மக்கள் திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. திமுக, அதிமுக கட்சியினர் எம்பி ஆனால் பாராளுமன்றத்திற்கு டீ குடிப்பதற்கு மட்டும் தான் செல்வார்கள்.

எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை மாதிரியான திட்டமாக கொண்டு வர அரும் பாடுபடுவேன் மற்றும் இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறை வேற்றுதல் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பேசினார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடுமலை நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் பாஸ்கரன், மற்றும் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...