பொள்ளாச்சியில் வீடு வீடாக சென்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வாக்காளர்களை அழைத்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி தொகுதியில் கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலில் அவசியம் வாக்களிக்க கோரி வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வாக்காளர்களை அழைத்தனர்.



பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்தரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர்.

மேலும் தேர்தலில் வாக்களிப்பது அவசியம் குறித்து கேஸ் சிலிண்டர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகிய பகுதிகளின் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...