கோவையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று இன்று (மார்ச்.29) வெளியிட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் வரும் ஏப்.19-ஆம் தேதியன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசின் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை இன்று (மார்ச்.29) வெளியிட்டுள்ளது.



இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடிதனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...