வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து குப்பிச்சிபாளையத்தில் விழிப்புணர்வு முகாம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாமினை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல்.19), நடைபெற உள்ளது. இதில் 100% அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வகையிலும், ஒவ்வொரு கிராமமாக சென்று விழிப்புணர்வு முகாமினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



அதன் முதல் கட்டமாக கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்பிச்சிபாளையம் ரோட்டில் இன்று (மார்ச்.29) வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

இந்த முகாமில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...