உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தெலுங்கில் பேசி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருகிறது. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், இலவச ஆடு உள்ளிட்ட திட்டங்களை முடக்கி வருவதாக முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுமலை நகராட்சி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். உடுமலைக்கு வருகை தந்த அவருக்கு முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ வுமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் தாரை தப்பட்டை முழுங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து எரிப்பாளையம், யு.எஸ். எஸ் காலனி, அண்ணா நகர், காந்தி நகர், உடுமலை மத்திய பஸ் நிலையம், தலை கொண்ட அம்மன் கோவில், லயன்ஸ் கிளப், ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர், காந்தி சதுக்கம், நக்கீரர் வீதி, யூனியன் ஆபீஸ் உள்ளிட்ட பகுதியில் திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலை நகராட்சி நான்காவது வார்டு இ எஸ் எஸ் காலனியில் அதிமுக செய்த சாதனைகளை தெலுங்கில் பேசி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார். மேலும் அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் ரூ 400 கோடியில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. தங்கம்மாள்ஓடையை தூர்வாரி அதன் இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.



நகரப் பகுதி இரவிலும் ஒளிரும் வகையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. உடுமலை வாரச்சந்தையை விரிவு படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இது போன்ற ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருகிறது. அதில் தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், இலவச ஆடு, மடிக்கணினி உள்ளிட்டவை அடங்கும். எனவே பொதுமக்கள் சிந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...