கோவையில் வட மாநிலத்தவர்களின் வாக்குகளை ஈர்க்க இந்தி மொழியில் போஸ்டர் ஒட்டிய பாஜக - கு.இராமகிருட்டிணன் கண்டனம்

கோவையில் வட மாநில வாக்காளர்களை குறிவைத்து இந்தி மொழியில் பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோவை கலெக்டர் அலுவலக முன்பு மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்திய நாட்டின் அடையாளம். இந்த அடையளத்தை பாஜக அழிக்கும் விதமாக செயல்படுபதாக பொதுவாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையிலே, இவர்களின் எண்ணத்தில் கருப்பு வண்ணத்தை பூசுகின்றன. தமிழ்நாட்டில் சங் பரிவார் அமைப்புகளின் பாசா பழிக்கவில்லை. இந்த நிலையிலே, தமிழ்நாட்டு மக்களை மாற்றி, பாஜகவுக்கு ஆதரவு அலை வீச வைக்க முடியாது என்பதனை பாஜக தரப்பு அறிந்திருக்கிறனர். இந்த நிலையிலே, தமிழ்நாட்டில் வட மாநில வாக்காளர்களை வைத்து தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்க துடிக்கிறது என்ற குற்றச்சாட்டு பொதுவெளியில் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக கோவையில் வட இந்தியர்களை குறி வைத்து இந்தி மொழியில், தேர்தல் பிரச்சார வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது, வரலாற்றில் பாஜகவால் தமிழ்நாடு மக்களை ஆள முடியாது என திட்டவட்டமான சவால் விட்டார். இந்த நிலையிலே பாஜகவால் வட மாநிலம் எங்கும், தென் மாநிலங்களில் சில இடங்களிலும் கோலாச்ச முடிந்தாலும், தமிழ்நாட்டில் இன்னும் ஒற்றை இலக்க வாக்கு சதவீதத்தை தாண்ட முடியாமல் தவித்து வருகின்றனர். திராவிடத்தால் ஊறிப்போன தமிழ்நாட்டு வாக்காளர்கள், பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலையில், பாஜகவின் விசுவாசிகள் உள்ள வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் குடியேற்றி, தாங்கள் நினைத்ததை பாஜக சாதிக்க நினைக்கின்றார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றன.



நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்களர்களை ஈர்க்க வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையிலே, கோயமுத்தூரில் வட மாநில வாக்காளர்களை குறிவைத்து இந்தி மொழியில் பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலக முன்பாக மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கின்றன. வட இந்திய ஒற்றுமை மன்றம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் இம்முறை வட இந்தியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். நமது குஜராத்தின் சிங்கம் மோடிஜிக்கு அண்ணாமலை முற்றிலும் விசுவாசமானவர். பிஜேபி ஜெயிக்கட்டும். இன்னும் சில நாட்களில் நமது மோடிஜி கோயம்புத்தூர், திருப்பூரையும், குஜராத்தையும் இணைப்பார். மோடி இருந்தால் அது சாத்தியம். இது ஒரு பொன்னான வாய்ப்பு. திராவிடக் கட்சியிலிருந்து இந்தியா விடுதலைக்கக, அண்ணாமலைக்கு வாக்களிக்களியுங்கள். மோடிஜிக்காக வாக்களியுங்கள். நமது குஜராத்திற்காக வாக்களியுங்கள். உத்தரபிரதேசத்திற்காக வாக்களியுங்கள். ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் பாரத் மாதா கி ஜே என குறிப்பிட்டிருக்கின்றனர்.



இந்தி போஸ்டர் குறித்து விமர்சித்து கண்டித்த கு.இராமகிருட்டிணன், கோயம்புத்தூர் அமைதியாக இருந்து வரும் நிலையில், கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஏற்கனவே வட மாநிலத் தொழிலாளர்கள் எங்கேயோ அடித்து சண்டையிட்டதனை, கோயம்புத்தூரில் வட மாநில தொழிலாளர்களை அடித்து துன்புறுத்தியதாக சமூக வலைத்தளத்தில் பழைய காட்சிகளை பகிர்ந்து, சமூக விரோதிகள் தமிழ்நாட்டு மக்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தி இருந்தனர். முதல்வருக்கும் இந்தியா கூட்டணிக்கும் இவர்கள் அவப்பெயரை ஏற்படுத்தி, இந்த சூழ்ச்சியை செய்தனர். மக்களிடையே பிளவுபடுத்துவதற்காக இது போன்ற இந்தி மொழியில் போஸ்டர் ஒட்டி இருக்கின்றார்களா என்பது ஐயமாக இருக்கின்றன . பிரச்சாரம் செய்து குருட்டு வழியில் வாக்கு சேகரிக்க முயல்கின்றார்களா என்று நாங்கள் நினைக்கின்றோம். ஏற்கனவே அண்ணாமலை பொதுமக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளார் என்ற நிலையில், அவர்கள் தரப்பில் இதை செய்கின்றார்களா என்ற கேள்வி எழுந்திருக்கின்றன. உடனடியாக அந்த போஸ்டரை அகற்றி, தேர்தல் அதிகாரியும் தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...