கோவையில் வாக்கு கேட்டு வந்த பாஜக தொண்டர்கள் மீது கல் எறிந்து காயப்படுத்திய வாலிபர் கைது..!

32 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினரிடம் வாக்குவாதம் செய்து கற்களை தூக்கி வீசிய நவ்சாத் என்ற நபர் மீது 294 பி, 324, 506/2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


கோவை: கோவையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, நேற்று பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் 32 வது வட்டத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் வசிக்கின்ற நவ்சாத் என்ற நபர் பாஜகவினர் வாக்கு சேகரிக்க கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதம் செய்த அவர், கற்களை தூக்கி வீசியுள்ளார். இதில், பிரச்சாரத்திற்கு சென்ற 2 ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்தனர்.



அதில், பிரபு என்ற தொண்டர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த மகளிர் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

பாதிக்கப்பட்டவர்களை, பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.



மேலும், சம்பவம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுண்டம்பாளையம் காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து சம்பவத்தை விசாரித்த போலீசார், நவ்சாத் மீது 294 பி, 324, 506/2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களுக்கு இஸ்லாமியர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இஸ்லாமிய வாலிபர் பாஜவினரை ஓட்டு கேட்க விடாமல் கல்லால் தாக்கி விரட்டிய சம்பவம் கோவை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...