கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கவுண்டம்பாளையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரச்சாரம்

திமுக வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு சென்றார்.



அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்திருந்தனர். இந்தநிலையில் அங்கு சாலையில் நேற்று இருந்த அவரது காரில் அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். காரின் பின்புற கதவை திறந்து சோதனை மேற்கொண்டனர்.



சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...