ஆவராம்பாளையத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்களிடம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டு என்று கே.ஆர்.ஜெயராம் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவராம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் சிறு, குறு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களை இன்று (மார்ச்.30) நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.



பின்னர் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.



மேலும் பொதுமக்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் நலன்களை கனிவுடன் விசாரித்தும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அடிதட்டு மக்களின் தேவைகளை கேட்காமலே அனைத்தையும் செய்து கொடுத்துள்ள அதிமுக திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்குகளை சேகரித்தார். உடன் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...