காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் பணிமனை திறப்பு விழா

நமக்கு எதிரி திமுக தான். பாஜகவை நாம் பொருட்படுத்த வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் அனைவரும் பூத் கமிட்டியில் முழு மனதோடு பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அ.தி.மு.கவின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அசோக் குமார், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் உள்ள NSN மஹாலில் நடைபெற்றது.



இதில் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடா, கோவை மண்டல தேர்தல் பிரிவு பொறுப்பாளருமான S.P. வேலுமணி, முன்னாள் அமைச்சர், ஈரோடு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் MLA, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் NS. நடராஜன், சிவசாமி ஆகியோர் பங்கேற்றனார்.



இந்த நிகழ்வில் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம், உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை வெல்ல எவரும் இல்லை என்ற வரலாற்று மிக்க சாதனையை படைத்துள்ளார். புரட்சித் தலைவர் இருக்கும் வரை எவராலும் வென்று காட்ட முடியவில்லை, புரட்சித் தலைவரின் பரிஸாக புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சிறப்பான முறையில் ஆட்சியை நடத்துவதால் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார்.

நமது பகுதி சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பகுதி, அதிமுக உறுதியாக வெற்றி பெறும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டு தர வேண்டும் என்று பேசினார்.



அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி . வேலுமணி பேசுகையில், பொதுமக்களுக்காக புரட்சித்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் எந்த பதவி வேண்டுமானாலும் வகுக்கலாம், முன்னாள் அமர்ந்துள்ள நீங்கள் நாளை மேடையில் அமரும் வாய்ப்பு மட்டும் தான், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை பொது மக்களுக்கு தந்துள்ளார்.

திமுக பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை, நாம் அனைவரும் காலரை உயர்த்திக் கொண்டு பொதுமக்களிடம் வாக்கு கேட்கலாம். அந்த அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நாம் கொடுத்துள்ளோம். அவிநாசி அத்திக்கடவு திட்டம், நான்காவது கூட்டுக் குடிநீர் திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. நமக்கு எதிரி திமுக தான் பாஜகவை நாம் பொருட்படுத்த வேண்டாம், வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறைந்த நாட்களே உள்ளதால் அனைவரும் பூத் கமிட்டியில் முழு மனதோடு பணியாற்ற வேண்டும்.

50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறைசாற்றிட வேண்டும் என்று பேசினார். முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி.வி.ஜெயராமன் பேசுகையில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார், மோடியா? எடப்பாடியார்?என்று இந்த தேர்தலை நாம் சந்திக்க இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்தால் இந்தியாவின் பிரதமர் யார் என்று நிர்ணயிக்கும் சக்தியாக எடப்பாடியார் திகழ்வார். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் நீங்கள் அனைவரும் அயராது உழைத்த, அதிமுக வரை இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நீங்கள் மாபெரும் வெற்றி வாய்ப்பு தர பாடுபட வேண்டும், நம்மில் ஒருவர் நமக்கான தலைவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். இதைத்தொடர்ந்து காங்கயத்தில் தேர்தல் பணிமனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆசியுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்களால் ஈரோடு வெற்றி வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு நாடாளுமன்றத்தை பொறுத்தவரை வெற்றி உறுதியாகிவிட்டது. 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த 3 ஆண்டுகாலமாக திமுக எந்த ஒரு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொடுக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழகம் போதைக்கு அடிமையாகி உள்ளது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு நாடாளுமன்றத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பேசினார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...