தொடரும் உயிரிழப்புகள்: கோவை வெள்ளியங்கிரி மலை ஏறியவர் மூச்சு திணறலால் உயிரிழப்பு.

சென்னையை சேர்ந்த ரகுராம் (50) என்பவர் நேற்று வெள்ளிங்கிரி மலையற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்படுவதால், மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னரே மலை ஏற்றத்தில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரித்துள்ளது.


கோவை: சென்னையை சேர்ந்தவர் ரகுராம் (50). செவன் ஹில்ஸ் என்ற அலுமினியம் பேப்ரிகேடர் என்றதொழிலாளர்கள் அனுப்பும் தனியார் நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு ஷீலா(45) என்ற மனைவியும், வர்ஷினி(22) என்ற ஒரு மகளும் உள்ளனர். 

ஆன்மீகத் தலங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உடைய ரகுராம், கடந்த 29.03.2024ம் தேதி சென்னையில் இருந்து தனது நண்பர்கள் 15 பேருடன், கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்துள்ளார்.

கோவைக்கு வந்த இவரும் அவரது நண்பர்களும், நேற்று30.03.2024 ஆம் தேதிகாலை 9 மணி அளவில் மலைஏற தொடங்கியுள்ளார். அப்போது,5- வது மலை ஏறிக்கொண்டிருக்கும்14.30 மணியளவில் ராகு ராம்மூச்சு திணறால் அவதிப்பட்டுள்ளார். 

பின்னர், மயங்கி கீழே விழுந்ததால், பாரம் தூக்கும் டோலி தொழிலாளர்கள் உதவியுடன்,இன்று அதிகாலை 04.00 மணிக்கு வெள்ளிங்கிரி மலை அடிவாரம் கொண்டு வந்துள்ளனர். அடிவாரத்தில் அவரை பரிசோதித்த மருத்துவர், ரகு ராம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக கூறப்படுகிறது. 

பின்னர், இறப்பு குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆலாந்துறை காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கோண்டு வருகின்றனர். 

தொடர்ந்து, வெள்ளிங்கிரி மலை ஏற்றத்தின் போது இறப்புகள் ஏற்படுவதால், கடந்த வாரம் வனத்துறையினர் யாரெல்லாம் மலை ஏறக்கூடாது என்ற சுற்றறிக்கையை வெளியிட்டனர். அதில், சக்கரை நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட

பிரச்சனைகள் உள்ளவர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே மலையேற்றத்தில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...