பொது மக்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொள்ளாச்சியில் வானில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன் வானில் பறக்க விடப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் இன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100% வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன் வானில் பறக்க விடப்பட்டது.



பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கேத்தரின் சரண்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவான இடங்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்த மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...