தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுகக் கூட்டம்

அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பேசுகையில் அதிமுக தொண்டர்கள் நாம் வீடு வீடாக சென்று பணியாற்றிட வேண்டும். பழையபடி வீதியில் கொடியை கொண்டு சென்றால் எந்த காரியமும் நடக்காது. இந்த காரியத்தை செய்தால் மட்டுமே எடப்பாடியாருக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கூறியுள்ளார்.



அரசு வேலையாக இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி அதிமுக தொண்டனுக்கு தான் முதல் முன்னுரிமை தரப்படும் என தெரிவித்தார். என்னுடைய தனிப்பட்ட சக்தியிலும் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, குடும்ப பிரச்சினையாக இருந்தாலும் சரி, உங்கள் கிராமத்தில் ஒரு நலத்திட்டமாக இருந்தாலும் சரி அனைத்து பிரச்சினைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பது எனது கடமை.



அந்தப் பணியை முழு நேர பணியாக ஏற்றுக் கொள்கிறேன். மக்கள் சேவையை நோக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக சென்று கொண்டுள்ளேன். இந்த மக்கள் சேவை யாருக்கு என்றால் உங்களுக்குத்தான் முன்னுரிமை. ஒவ்வொரு தொண்டனுக்கும் தான் அதிமுக தொண்டர்கள் முழு பலத்துடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வைத்தீர்கள் என்றால் நமது எடப்பாடியாருடன் சேர்ந்து என்னால் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்வேன் என்று தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து அதிமுக தொண்டர்களுக்கும் முதலில் அனைத்து சலுகைகளும் தொண்டனுக்கு அதன் பிறகு தான் பொதுமக்களுக்கு என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...