உடுமலை அருகே குரல்குட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து குடுகுடுப்பைக்காரர் வேடத்தில் சேலம் கோவிந்தன் பிரச்சாரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மோடி இன்னொருமுறை பிரதமராக வந்தால் நாடு தாங்காது. அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று குடுகுடுப்பை அடித்தபடி சேலம் கோவிந்தன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குரல்குட்டையில் திமுகவை சேர்ந்த சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைகாரர் வேடத்தில் தி.மு.க வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து ஒட்டுசேகரித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் இவர் அதன் ஒரு பகுதியாக குரல்குட்டையில் தி.மு.க சுற்றுசூழல் ஆர்வலர் குரல்குட்டை ராமசாமி தலைமையில் வீடு வீடாக சென்று குடுகுடுப்பை பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தனது பிரச்சாரத்தில் 'இந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மோடி இன்னொருமுறை பிரதமராக வந்தால் நாடு தாங்காது, அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று குடுகுடுப்பை அடித்தபடி இவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.



கோவிந்தனின் இந்த நூதன முறை பிரச்சாரம் மக்களை ரசிக்க வைப்பது மட்டுமின்றி மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்றுள்ளது. குடுகுடுப்பை சத்தம் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இரு கரம் கூப்பி அவரது பிரச்சாரத்தை கேட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...