அவிநாசி சாலை மேம்பால பணிகள் முடிய டிசம்பர் அல்லது ஜனவரி ஆகலாம் என தகவல்

ஏறு தளம், இறங்கு தளம் அமைத்தல் உள்பட சில பணிகள் உள்ளன. ஹோப்ஸ் பகுதியில், ரயில்வே தடம் கீழே உள்ளதால், அங்கு ஏற்கனவே சிறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: உப்பிலிபாளையம் சிக்னல் துவங்கி கோல்ட்வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பால கட்டுமான பணிகளை முடிக்க ஒப்பந்தப்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தான் அவகாசம் உள்ளது ஏன்றாலும் இன்னும் பல பணிகள் பாக்கி உள்ளன.

மொத்தம் அமைக்கவேண்டிய 304 டெக் ஸ்லாப்களில் இதுவரை 212 டெக் ஸ்லாப்கள் மேலே பொறுத்தப்பட்டுவிட்டன. இன்னும் 92 தான் உள்ளது. 305 தூண்களில் 298 அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 7 தூண்கள் மட்டுமே உள்ளன. 10.1 கிலோமீட்டருக்கு மேம்பாலத்தில் சாலை பகுதி அமைக்கப்படவேண்டும்.

இதில் 6.1 கிலோமீட்டர் சாலைக்கான மேற்பரப்பு அமைக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஏறு தளம், இறங்கு தளம் அமைத்தல் உள்பட சில பணிகள் உள்ளன. ஹோப்ஸ் பகுதியில், ரயில்வே தடம் கீழே உள்ளதால், அங்கு ஏற்கனவே சிறு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு உயர்மட்ட மேம்பாலத்திற்கான தூண் அமைப்பது சிக்கல் என்பதால் இந்த பகுதிக்கு நடுவே முன்னும் பின்னும் நெருக்கமாக உள்ள இரண்டு தூண்கள் இடையே 51 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் அதற்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியதை அடுத்து, அங்கு முதலில் அதற்கான சோதனை பணிகள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அங்கு அமையவுள்ள இணைப்பு பாலத்தின் வடிவமைப்புக்கு ரயில்வே அனுமதி வழங்கியதால் விரைவில் பணிகள் துவங்க உள்ளது. எனவே இதுபோன்ற பணிகள் மீதம் இருப்பதால் இவற்றை முடித்திட குறைந்தது 4 மாதங்கள் ஆகும். இதன்காரணமாக மேம்பால பணிகள் டிசம்பர் 2024 அல்லது ஜனவரி 2025ல் தான் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...