மடத்துக்குளம் பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களைய கொண்டு வரவும் பாடுபடுவேன் என்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரத்தொழுவு மெட்ராத்தி ,கணியூர், துங்காவி, ஜல்லிபட்டி, குறிச்சி கோட்டை உட்பட 40 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் இரட்டை இலை சின்னத்திற்கு பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளன.



இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இரட்டை இலை சின்னத்திற்கு எனக்கு வாக்களித்தால் அம்மாவின் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும், மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களையும் கொண்டு வர பாடுபடுவேன் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி. மகேந்திரன் , மடத்துக்குளம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...