வாலிபால் விளையாடி உப்பிலிபாளையத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு

உப்பிலிபாளையம் பகுதியில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரச்சார மேற்கொண்டார். அப்போது, அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி அவர் வாக்கு சேகரித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மார்ச்.31) கள்ளிமடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவக்கினார். அவருக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.



அதனைத் தொடர்ந்து உப்பிலிபாளையம் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட அவர் அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுடன் வாலிபால் விளையாடி வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் திமுக தொண்டர்கள் பலரும் இருசக்கர வாகனத்தில் கருப்புசிவப்பு பலூன்களுடனும் திமுக கொடியுடனும் பேரணியாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...