வாழைப்பழ காமெடி சொல்லி பெட்டராபுரம் பகுதியில் வாக்கு சேகரித்த நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளார் ஆ.ராசா

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மாநில பேரிடர் நிதியிலிருந்து 1500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாகவும், மத்திய பேரிட நிதி கேட்டபோது அதுதான் இது என வாழைப்பழ காமெடி போல நிர்மலா சீதாராமன் கூறினார் என்று வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார்.


நீலகிரி: நீலகிரி தொகுதி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டராபுரம் மற்றும் மதம்பாளையம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய ஆ.ராசா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சபதம் எடுத்துள்ளதாகவும், அது தமிழ்நாட்டை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் இந்தியாவை காப்பாற்ற சபதம் எடுத்துள்ளதாகவும், நான்காவது முறையாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் ஒருமுறை அமைச்சராக இருந்துள்ளதாகவும், இந்த தேர்தல் நீலகிரிக்கான தேர்தலும் அல்ல, இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கான தேர்தலும் அல்ல, இந்த தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல்.



இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேர்தல் எனவும், தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரிய போதும் தரவில்லை எனவும், மாநில பேரிடர் நிதி, மத்திய பேரிடர் நிதி என இரண்டு நிதி உள்ள நிலையில் மாநில பேரிடர் நிதியிலிருந்து 1500 கோடி ரூபாய் மட்டும் வழங்கியதாகவும், மத்திய பேரிட நிதி கேட்டபோது அதுதான் இது என வாழைப்பழ காமெடி போல நிர்மலா சீதாராமன் கூறினார் என எனக்கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிக்க வந்த ஆ.ராசாவிற்கு அப்பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுக்க காத்திருந்தனர். ஆ.ராசா வாகனத்தில் இருந்ததால் பிரச்சார வாகனத்திற்கு ஆரத்தி எடுத்து வாகனத்திற்கு பொட்டு வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...