உடுமலையில் சாவிகள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து - ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல்

தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலையில் சாவிகள் விற்கும் கடையை இப்ராஹிம் என்பவர் நடத்தி வருகின்றார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் கடையில் இருந்து புகை வருகிறது என்று தகவல் கிடைத்த நிலையில் உடனே கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் தீ விபத்து ஏற்பட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இருப்பினும் விற்பனைக்கு தயாராக இருந்த சாவிகள் மற்றும் சாவி தயாரிக்கும் உயர் ரக இயந்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து சாம்பலானது இதன் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது.



தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை பகுதியில் முக்கிய சாலையில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...