கோவையில் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.


கோவை: இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.



அதற்கான பணிகள் ‘எல் அண்ட் டி’ புறவழிச்சாலையில் நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளை தமிழக அமைச்சர் முத்துச்சாமி இன்று (ஏப்ரல்.1) ஆய்வு மேற்கொண்டார். உடன், கழக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ்.எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், மாணவரணி மாநில துணைச்செயலாளர் விஜி.கோகுல், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, துணை அமைப்பாளர் சாதிக், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...