திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் பகுதிகளான பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாகவே திராவிட கட்சிகள் அனைத்து திமுக அதிமுக பொதுமக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக, அதிமுகவினர் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாரத பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்.



மேலும் தற்போது உள்ள திட்டங்கள் தொடரவும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், சனுப்பெட்டி ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பாமக, பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...