வீரபாண்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரச்சாரம்

தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை அதிமுக சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் சின்ன தடாகம், மாங்கரை, வீரபாண்டி, ஆனைகட்டி உள்ளிட்ட பகுதிகளில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் உடன் இணைந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.



இதில் சின்ன தடாகம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் போது அங்கிருந்த பொதுமக்களுடைய பேசிய வேட்பாளர் ராமச்சந்திரன், தான் இதே பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் என்றும், தனக்கு வாக்களித்தால் எப்பொழுது வேண்டுமென்றால் சந்திக்கலாம் என்றும், உங்களுக்காக பாராளுமன்றத்தில் எனக்கு ஒதுக்கப்படும் இருக்கையில் இருந்து உங்களுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

தனது செல் நம்பர் அனைவருக்கும் தெரியும் என்றும், எப்போது வேண்டுமானாலும் எனது செல் நம்பருக்கு போன் செய்யலாம் ஒரு வேலை எடுக்காமல் இருந்தாலும் ஒரு நாளில் திரும்ப அழைப்பேன் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் மிஸ்டு கால் ஆகாது என்று தெரிவித்தார்.



முன்னதாக தடாகம் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட சிங்கை ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமி எஸ்.பி. வேலுமணி, பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் பெயரில் அர்ச்சனை செய்து அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...