தேர்தல் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல்.1) வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும்,, மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல்.1) வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...