உடுமலை மேற்கு ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு சேகரிப்பு

மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு 10 ஆண்டுகளாக தமிழக மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதற்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 5 ஆண்டுகள் ஆகியும் கட்டப்படாமல் உள்ளதே சான்றாகும் என்று திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவனூர் புதூர், பூலாங்கிணறு, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி பேசியதாவது, எல்லாருக்கும் எல்லாம் திட்டத்தின் மூலம் வாக்களிக்க தவறிய பொது மக்களுக்கு கூட அனைத்து திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்து வருகின்றார். ஆனால் மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு 10 ஆண்டுகளாக தமிழக மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதற்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 5 ஆண்டுகள் ஆகியும் கட்டப்படாமல் உள்ளதே சான்றாகும்.

இதே போன்று எடப்பாடி பழனிச்சாமி உரிமைகளை விட்டுக் கொடுத்து தமிழர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு என்ற நிலையை மாற்றி வட மாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தந்து உள்ளார். ஆனால் முதல்வர் தலைமையிலான திமுக அரசு சுதந்திர போராட்ட வீரர் எத்தலப்ப நாயக்கருக்கு உருவச்சிலையும் அரங்கமும் அமைத்து வருகிறது.



அது மட்டுமின்றி தலைவர்கள் தியாகத்தை போற்றும் வகையில் நினைவிடங்களையும் உருவ சிலைகளையும் அமைத்து வருகிறது. மேலும் மேம்பாலங்கள் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட தொலை நோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அனைத்து சமுதாயத்தினரையும் ஒரே மாதிரியாக பார்ப்பது தான் திராவிட மாடல் அரசு. இதனால் உரிமைத்தொகை வராத நபர்களுக்கும் பெற்று தரப்படும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரப்படும் எனவே உங்களுக்காக பணியாற்றவும் பல்வேறு திட்டங்களை பெற்றுத் தரவும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், செழியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...