உரிய இழப்பீடு கேட்டு நல்லதங்காள் பாசன விவசாயிகள் தாராபுரம் அருகே கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு நல்லதங்காள் அணை கட்டுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 750-க்கும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போது வரை வழங்கப்படாததால் விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். நல்லதங்காள் நீர்த்தேக்கணைக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் கடந்த 6-மாதங்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...