மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் வாக்கு சேகரிப்பு

உரல்பட்டி, ஆண்டியகவுண்டனூர், பள்ளி வலசு, குரல் குட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உரல்பட்டி, ஆண்டிய கவுண்டனூர், பள்ளி வலசு, குரல் குட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அவர்களுக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஆன மகேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.



இதற்கிடையில் வாக்கு சேகரிப்பின் போது கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் இருந்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.



ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் மற்றும் கிளைச் செயலாளர்கள் மற்றும் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...