வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் அறிமுக கூட்டம்

வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக கட்சியில் தனித்துவமாக நின்று தங்களது பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வசந்த ராஜன் என்ற வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.



வால்பாறை பகுதியில் 31.3.24 பாரதிய ஜனதா கட்சி சார்பாக வசந்தராஜன் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வால்பாறை நகர செயலாளர் ஆர்.கே. பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கூடத்தில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் செயல்படுத்தப்படும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...