உடுமலை அருகே குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

நேற்று மாலை 6:00 மணி அளவில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் ஈரோட்டில் இருந்து வந்த ஆறு பேர் கொண்ட வருமானவரித்துறை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக அணிக்கடவு கிரி உள்ளார். இவர் ராமச்சந்திராபுரம் ஊராட்சி அணிக்கடவு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6:00 மணி அளவில் இவரது வீட்டுக்கு ஈரோடு வருமானவரித்துறை சேர்ந்த அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த சோதனையில் எவ்வித ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...