வால்பாறையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியானது, கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.


கோவை: இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை பொதுத் தேர்தல் 2024 கோயம்பத்தூர் மாவட்டம் தேர்தல் நாள் ஏப்ரல் 19 நமது இலக்கு 100% வாக்குப்பதிவு, வாக்களிப்பது நாம் அனைவரின் ஜனநாயக கடமை என்ற தேர்தல் அலுவலக தேர்தல் நடத்துபவர் தலைமையில் கோவை மாவட்டம் வால்பாறையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



கல்லூரி வளாகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நிறைமதி தலைமையில் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தேர்தல் வாக்களிப்பது நமது கடமை வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உடை அணிந்து கல்லூரி வளாகத்தில் இருந்து காந்தி சிலை பேருந்து நிலையம் கடைவீதி வழியாக அஞ்சலகம் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்திற்கு சென்றனர்.



நமது ஜனநாயகம் தேர்தல் வாக்களிப்பது நமது கடமை நூறு சதவீதம் வாக்கு அளிப்போம் என்று உறுதி ஏற்று கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...