ஆனைமலையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி

புதிய தொழிற்சாலை அமைக்கப்படும், படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் துவங்க வங்கியில் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உறுதியளித்தார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஈஸ்வரசாமி இன்று (ஏப்ரல்.2) காலை வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை ஒன்றியம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன்படி நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம், அம்பராம்பாளையம், சுங்கம், சுப்பேயாகவுண்டன் புதூர், ஆத்து பொள்ளாச்சி, காளியப்ப கவுண்டன்புதூர், வாழைக் கொம்பு, குளத்துபுதூர், கிழவன் புதூர், மாரப்பகவுண்டன் புதூர், செம்மேடு, தாத்தூர் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்பொழுது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் ஈஸ்வரசாமி, இந்த பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க செய்யப்படும், படித்த இளைஞர்களுக்கு சுய தொழில் துவங்க வங்கியில் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படும், வால்பாறை சட்டமன்றத் தொகுதி மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி இரண்டிற்கும் பொதுவாக பாராளுமன்ற அலுவலகம் அமைக்கப்படும் என்று பல்வேறு கோரிக்கைகளை கூறி வாக்குகளை சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.வி.எஸ் தேவசேனாதிபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...