ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவல் கூறியதாக முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் கண்டனம்

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பதை திமுக அரசு தடுத்துள்ளது என முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


ஈரோடு: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், காலை நேரத்தில் காய்கறிச்சந்தை போன்ற இடங்களில் பொதுமக்களுடன் நேரடி சந்திப்பு, மாலையில் பொதுக்கூட்டம் என்று நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மற்றும் ஈரோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். ஈரோடு பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தின் மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவித்த கருத்துகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பதை திமுக அரசு தடுத்துள்ளது என முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதோடு, காலிங்கராயன் வாய்க்கால் கரைப்பகுதியில் இருந்த சாய, தோல் ஆலைகள் பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது.



1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில், ரூ. 100 கோடி மதிப்பீட்டில் காலிங்கராயன் வாய்க்கால் வலது கரைப்பகுதி தரைத்தளம் அமைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனால், கால்வாயின் வலது கரைப் பகுதியில் இருக்கும் ஆலைகள் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல், தடுத்து நிறுத்தப்படடு, தெளிவான நீர்ப்பாசனம் பெற்று வருகிறது" என்றெல்லாம் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்குமாறு முன்னாள் அஇஆதிமுக அமைச்சர் கே.வி ராமலிங்கம் அவர்கள் கூறியதாவது, "இவையெல்லாம் பொய்யான தகவல்களாக உள்ளன. அதிமுக ஆட்சியில் நான் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது, காலிங்கராயன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. காலிங்கராயன் கால்வாயை ஒட்டிய எந்த சாய, சலவை, தோல் தொழிற்சாலையும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு இதுவரை மாற்றப்படவில்லை. காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவுகள் கலந்து, நீர் மாசடைவது தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தொடர்ந்து பேசி வருகிறோம் மற்றும் இந்த அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம் என்று கூறினார்.

இது காலிங்கராயன் பாசன விவசாயிகள், ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. தேர்தல் பிரச்சாரம் என்பதற்காக, முதல்வர் இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை வளாகம் கட்டிடப்பணி முடிவு அடைந்து 2 ஆடுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாததற்கும் ஈரோடு உழவர் சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்படுவதையும் எதிர்த்து கண்டனம் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...