உடுமலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

காந்தி சதுக்கம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய அணிவகுப்புக்கு உடுமலை டி.எஸ் பி.சுகுமாறன் தலைமை வகித்தார். அணிவகுப்பின்போது, நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், அச்சப்பட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் உடுமலையில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. காந்தி சதுக்கம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய அணிவகுப்புக்கு உடுமலை டி.எஸ் பி.சுகுமாறன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் ஜீவானந்தம், பாலமுருகன்,கீதா, நிர்மலாதேவி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னசி மேரி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



காவல்துறையினர் அணிவகுப்பு பள்ளிவாசல் வீதி, சதாசிவம் வீதி வழியாக பொள்ளாச்சி- பழனி சாலையை அடைந்து, பின்னர் பழைய பஸ் நிலையம் வழியாக சென்று மத்திய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. குஜராத் மாநிலம் சூரத்தில் பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் எ.ஜே. வஷவா தலைமையில் வருகை தந்த துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுத படையினர் உடுமலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் 160க்கும் மேற்பட்டோர் அணி வகுப்பில் ஈடுபட்டனர்.



ஊர்வலம் முன்பு உடுமலை காவல்துறையினர் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அச்சப்பட வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...