விஜய் படத்தில் வருவது போல பொதுமக்கள் வாக்களிப்பது ஒரு விரல் புரட்சி - துடியலூரில் அண்ணாமலை பிரச்சாரம்

ஏப்ரல் 19ம் தேதி வாக்காளர்கள் செலுத்தப்போவது வாக்கு இல்லை ஒரு விரல் புரட்சி, தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு கோவை துடியலூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அண்ணாமலை பாரத பிரதமர் 3வது முறையாக ஆட்சியமைக்கப் போகிறார். கடந்த 10 ஆண்டுகளில் நேர்மையான ஒரு ஆட்சி, வெளிப்படைத் தன்மையான ஆட்சி, ஏழை மக்களை மையப்படுத்தி ஒரு ஆட்சி, பெண்களை மையப்படுத்தி ஒரு ஆட்சி, இளைஞர்களை மையப்படுத்தி ஒரு ஆட்சி, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களை மையப்படுத்தி ஒரு ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளார்கள்.



இதனிடையே அண்ணாமலை பேசிக்கொண்டிருந்த போது தொடர்ந்து பொதுமக்கள் பூக்களை அண்ணாமலை மீது வீசிக்கொண்டு இருந்தனர். இதில் சில பூக்கள் அண்ணாமலையில் வாயில் விழுந்ததால் பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு வாயில் இருந்து பூக்களை எடுத்து பின் பேச்சை தொடர்ந்தார். மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கருத்தில் ஒற்றுமையாக இருந்து 400 பாராளுமன்ற வேட்பாளர்களுடன் வெற்றி பெற வேண்டும். எப்போதும் தேசியத்தின் பக்கம் நிற்கும் கோயமுத்தூர். இம்முறையும் நிமிர்ந்து நிற்கிறது. மோடியில் 400 பாராளுமன்ற உறுப்பினர்களில் முதல் உறுப்பினராக கோவை இருக்க வேண்டும். இந்தியாவுடைய வளர்ச்சியில் கோயம்புத்தூரின் பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த நகரம் இதற்காக 20 ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறது.



மத்தியில் மோடி இருக்கும்போது முழுமையான வளர்ச்சியை கோயம்புத்தூர் பார்க்க வேண்டும். ஏப்ரல் 19ம் தேதி நீங்கள் செலுத்தப்போவது வாக்கு இல்லை ஒரு விரல் புரட்சி, தமிழக அரசியல் களத்தில் மாற்று அரசியல் வேண்டும் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும். பாரத பிரதமர் கடுமையான முடிவுகள் எடுக்க 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டும். இந்திய அளவில் அல்லாமல் உலக அளவில் கோயம்புத்தூர் முக்கிய நகரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதற்கான அனைத்து சக்திகளும் கோயம்புத்தூருக்கு உண்டு. உங்களுக்கு நாங்கள் வைக்கும் ஒரே வேண்டுகோள். இன்னும் தேர்தலுக்கு 16 நாட்கள் தான் உள்ளது. ஆகவே நீங்கள் வேட்பாளராக மாற வேண்டும். நீங்கள் வாக்களிப்பதோடு நின்று விடாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களை கொண்டுவந்து வாக்களிக்க செய்ய வேண்டும்.

16 நாட்கள் தேசத்திற்காக நாம் வேலை செய்தால் மோடி அடுத்த 5 ஆண்டுகள் நமக்காக வேலை செய்வார் என்று பேசினார். மேலும் அரசியல் என்றால் குப்பை, அரசியல் என்றால் சாக்கடை என்று ஒதுங்கியிருந்த மக்கள் இன்று தாமாக வந்துள்ளனர் என்றார். 10 மணி ஆனதைத் தொடர்ந்து தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். தொடர்ந்து அவர் மீது வீசப்பட்ட பூக்களை எடுத்து அவர் முன் இருந்த பொதுமக்கள் மீது வீசினார். மேலும் செல்போனில் பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். பரப்புரை நிகழ்ச்சி முடிந்தது. அங்கு கீழே கிடந்த காலி தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை பாஜகவினர் அகற்றினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...