கோவையில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை - யானை விரட்டும் பணிகளில் தொய்வு

பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில், 1.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பாதிகப்பட்ட விவசாயி வேதனையுடன் கூறியுள்ளார்.


கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்தன. பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காய்களை யானைகள் சேதப்படுத்தின. இதில், 1.5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெருமாள் சாமி என்ற விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் போதிய அளவில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யானை விரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...