மக்கள் விரோத ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

சுங்கம், குமாரபாளையம், தெக்காலூர், வரப்பாளையம், தேர் பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் தலைமையில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது. அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகுமாரன் முன்னிலையில் நடைபெற்றது.



சுங்கம், குமாரபாளையம், தெக்காலூர், வரப்பாளையம், தேர் பாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டதாகவும், பொதுமக்கள் ஒரு விரல் புரட்சியில் இரண்டு விரலான இரட்டை இலை சின்னத்திற்கு உங்களது பொன்னான வாக்குகளை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.



அது மட்டும் இன்றி தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்து விட்டதாகவும், குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் மிட்டாய்களிலும் போதை பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தமிழகம் போதை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...