உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் – தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உறுதி

அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தால் ஆதரவு அளிப்பதாக வாக்கு கேட்க வந்த வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் உப்பாறு பாசன விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் குண்டடம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் வேனில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தேர் பாதை என்ற இடத்தில் ஆற்றல் அசோக்குமார் திறந்தவெனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகின்றார்.



அப்போது உப்பாறு பாசன விவசாயிகள் வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் வேனில் ஏறி தங்கள் பகுதியில் உள்ள அணைக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்து தந்தால் பாசன விவசாயிகள் அனைவரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.



இதனைக் கேட்ட வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் சட்டப்படி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தின் போது மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன், பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ரமேஷ், செல்வகுமார், நகரச் செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக பன்னீர், வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...