அவிநாசி அருகே தொரவலூரில் முனியப்பசாமி கோவில் பொங்கல் விழா – நேர்திகடனாக 500க்கும் மேற்பட்ட கிடாய்களை வழங்கிய பக்தர்கள்

பக்தர்கள் வழங்கிய 500க்கும் மேற்பட்ட கிடாய்களில் 150 கிடாய்களை வெட்டி பக்தர்களுக்கு அன்னதானமாக போடப்பட்டதாக கோட்டை முனியப்ப சாமி கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட தொரவலூர் பகுதியில் அருள்மிகு கோட்டை முனியப்ப சாமி திருக்கோயில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடம் பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது.



கடந்த 18ஆம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்வுடன் பொங்கல் திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இதில் பரவலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.



கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் வழங்கி இருப்பதாகவும், இதில் கோவில் அன்னதானத்திற்கு 150க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 15 ஆயிரம் பேருக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுபூஜையும் சைவ அன்னதானமும் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...