குனியமுத்தூர் அருகே இடையர்பாளையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு குடோனில் தீ விபத்து

பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவை தீப்பிடித்து எரிந்ததால், கரும் புகை வான் உயர்ந்ததற்கு எழுந்துள்ளது. பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையத்தில் கண்ணப்பன் என்பவர் தோட்டத்தில் ஐந்துக்கு மேற்பட்ட குடோன்கள் சுரேஷ் என்பவர் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த குடோன்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தலையணி செய்யக்கூடிய பஞ்சுகள் இருந்துள்ளது.



இந்த நிலையில் மின் கசிவு காரணமாக இன்று (ஏப்ரல்.3) மாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



தீயானது மளமள வென பிடித்ததால் அடுத்தடுத்து குடோனுக்கு பரவியதால் தீயணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.



இதனை அடுத்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவை தீப்பிடித்ததால் கரும் புகை வான் உயர்ந்ததற்கு எழுந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...